Thursday, September 6, 2007

எனது நூல்களின் அறிமுகம் - நிர்வாணம்.

எனது முதலாவது சிறுகதை தொகுதியான “நிர்வாணம்” 1991 இல் கொழும்பில் வெளியீட்டு வைக்கப்பட்டது. இத் தொகுப்பினை திருகோணமலை தாகம் கலை இலக்கிய வட்டம் வெளியீட்டு இருந்தது. 1967 தொடக்கம் 1975 வெளியான எனது பன்னிரன்டு கதைகளின் தொகுப்பே நிர்வாணமாகும். கொழும்பு வெளியீட்டுக்கு பின் மட்டக்களப்பு, திருகோணமலை , வவுனியா ஆகிய இடங்களில் அறிமுக விழாவும் இடம் பெற்றது. இந்த நூலுக்கு 1993 கோவை லில்லி தேவசிகாமணி பரிசுதிட்டத்தின் கீழ் விருது கிடைத்தது.


(சிங்கள பதிப்பின் அட்டைப்படம்)

தமிழ்நாட்டில் நியூ செஞ்சரி புக் ஹவுஸினால் இரண்டாம் பதிப்பும் (1994), கலைஞன் பதிப்பத்தினால் மூன்றாம் பதிப்பும் வெளியானது. சிங்கள மொழியில் இரு பதிப்புக்களாக “காதல் யாத்திரைகள்” “தமிழ்ச் சிறுகதைகள்” என்னும் பெயரிலும் வெளிவந்துள்ளன. அத்தோடு இச்சிறுகதைகள் யாவும் தினகரன் , ஈழநாடு , ராதா, கலைமலர், மல்லிகை, மாணிக்கம் ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. அத்தோடு அனேகமான சிறுகதைகள் இலங்கை வானொலியிலும் அந்தந்த காலப்பகுதியில் ஒலிப்பரப்பட்டுள்ளன.
(தமிழ்நாட்டுப் பதிப்பின் அட்டைப்படம்)

இச்சிறுகதை தொகுதியில் உள்ள அனைத்துச் சிறுகதைகளும் இந்த வலைப்பதிவில் நிர்வாணம் என்னும் வகைபடுத்தலுக்குள் அடங்கியிருக்கின்றன.

9 comments:

கானா பிரபா said...

இடையில் உங்களுடைய பதிவுகளை விட்டுவிட்டேன். விட்ட இடத்தில் இருந்து தொடங்க வேணும்.

தொடர்ந்தும் பதிவில் உங்களைக் காண்பது மகிழ்ச்சியளிக்கின்றது.

உடுவை எஸ். தில்லைநடராசா said...

நன்றி பிரபா, உங்களுக்கு இருக்கக் கூடிய நேரப்பிரச்சனைகளுக்கு மத்தியில் படிக்கின்றீர்கள். நன்றி. அத்தோடு எனது அப்பா என்னும் தொடரை (மல்லிகையில் வந்தது வாசித்து இருப்பீர்கள் என நினைக்கின்றேன்) அடுத்து பதிவில் இடலாம் என நினைக்கின்றேன்.

Anonymous said...

/இத் தொகுப்பினை திருகோணமலை தாகம் கலை இலக்கிய வட்டம் வெளியீட்டு இருந்தது/

தாகம் மைக்கேல் கொலின் இப்போது எங்கே? அவரின் 'தாகம்' ரோணியோ இதழுக்கு எழுதிய காலமும் உண்டு. அப்படியான தட்டச்சு/ரோணியோ முயற்சிகளும் இவ்வலைப்பதிவு காலத்திலேயும் வியப்பளிப்பன.

Muruganandan M.K. said...

உங்கள் பதிவை ஆர்வமுடன் படித்தேன். வலையில் உங்களைச் சந்திப்பது மகிழ்ச்சி ஊட்டுகிறது

உடுவை எஸ். தில்லைநடராசா said...

பல நாட்களுக்கு முன் தான் மைக்கல் கொலினைச் சந்தித்தேன். அவரது தற்போதைய முகவரி தெரியவில்லை.

90களின் ஆரம்பத்தில் திருக்கோணமலையில் இருந்த போது அவரது றோனியோ வாசித்து மகிழ்ந்து நேரடியாகப் பாராட்டியுள்ளேன்.

பாரதிநேசன் said...

உங்கள் சிறுகதைத்தொகுதி சிங்களத்திலும், தமிழ்நாட்டிலும் வெளிவந்தது சந்தோசம். உங்கள் கலை அனுபவங்களை பதிவில் இடுங்கள்

உடுவை எஸ். தில்லைநடராசா said...

கருத்துக்கு நன்றி பாரதிநேசன். நீங்கள் கேட்டது போல எனது அனுபவங்கள் தொடர்ந்தும் இவ்வலைப்பதிவில் வரும்

உடுவை எஸ். தில்லைநடராசா said...

//டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

உங்கள் பதிவை ஆர்வமுடன் படித்தேன். வலையில் உங்களைச் சந்திப்பது மகிழ்ச்சி ஊட்டுகிறது//

நன்றி டொக்ரர் எனக்கும் உங்களை வலைப்பதிவில் கண்பது உற்சாகம் உற்சாகமூட்டுகின்றது.

மாயா said...

ஐயா
நீங்கள் நடந்து வந்த
கலை தொடர்பான பாதையை பதிவில் இடலாமே ? :)