Sunday, September 16, 2007

தும்மல் வந்தால் கவனம் (அப்பா தொடர்-08)



ஒரிடத்திற்க்குப் போவதற்க்கு முன்பாக இட அமைவு பற்றியும் தெளிவான தகவல்களைப் பெற வேண்டுமென்று வற்புறுத்துவார்.தந்தையாரின் இந்த அறிவுரையைக் கடைப்பிடிக்கததால் இரண்டு முறை தடுமாறியிருக்கின்றன்.

ஒரு முறை வவுனியாவிலிருந்து வந்து கொண்டிருந்த போது இலங்கையில் தயாரன ‘’இதயராகம்” படத்தைப் பார்க்க வேண்டுமென்ற எண்ணத்துடன் விரைந்து வந்த போது வழியில் சிறிது தாமதம். இரவு ஏழு மணிக்கு தியேட்டருக்குள் நுழைந்து சில நிமிடங்கள் சென்ற பின்தான் வேறு ஒரு தியேட்டருக்கு மாறி வந்துவிட்டதையும் இதயராகம் படத்துக்கு பதிலாக ஏற்கனவே பார்த்த ‘’ஒளி விளக்கு’’ படம் ஒடிக் கொண்டிருப்பதையும் அறிய முடிந்தது.


பம்பலப்பிடடி இந்துக் கல்லுர்ரி மண்டபத்தில் எனது பழைய கல்லூரியான உடுப்பிடடி அமெரிக்கன் மிசன் கல்லூரியின் வருடாந்த பொது கூட்டம் நடப்பது வழக்கம். திகதியையும் நேரத்தையும் மட்டும் குறித்துக் கொண்டு வழக்கம் போல சென்ற பின்னர் தான் கூட்டம் நடை பெற்ற இடம் வேறோரிடம் என்பதைத் தெரிந்து கொண்டேன்.


சாப்பாட்டுக் கடையில் இளைஞரொருவர் இடையிடையே தும்மிக் கொண்டு மிளகாய் வெட்டும் வேலையைச் செய்து கொண்டிருந்தார்। இதனை பார்வையிட்ட தந்தை இருமல் - தும்மல் வருவது போலத் தோன்றும் போது ஆயுதங்களைப் பாவித்து எந்த வேலையையும் செய்யக் கூடாது. இருமல்- தும்மல் அடக்க முடியா விட்டால் கையில்லுள்ள ஆயுதங்களைத் தரையில் வைக்க வேண்டும் என்று சொல்லுவார். தந்தையின் சொல்லை, ‘சும்மா போங்கய்யா’ என்று எள்ளி நகையாடிக் கொண்டு இளைஞர் மிளகாய் வெட்டும் வேலையைத் தொடர்ந்தும் செய்தார். திடீரென்று ஒரு பெரிய தும்மல், மிளகாய் வெட்டிக் கொய்டிருந்த வலது கை இடது கை விரலை வெட்ட வலி பொறுக்காது கையிலிருந்து விழுந்த கத்தி அவர் காலையும் பதம் பார்த்தது.

இருமல், தும்மல் வரும்போது மட்டுமல்ல, தலைவலி, மயக்கம், உடல் அசதி இருக்கும் போது ஆயுதங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்வதோடு, கண்ணாடியில் முகம் பார்த்தல், முகச்சவரம் செய்தல்
ஆகியவற்றையும் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்பார்.

அப்பா வருவார்............
முன்னைய இடுகைகள் ‘’அப்பா''என்னும் வகைப்படுத்தலினுள்

No comments: