Saturday, February 8, 2014

கொழும்பு தமிழ் சங்கத்தில் குழந்தைகளை குதூகலத்தில் ஆழ்த்திய மாஜால நிகழ்ச்சி

பெரும் பாலும் இலக்கிய நிகழ்வுகள் கலைநிகழ்வுகள் நடை பெறும் கொழும்பு தமிழ் சங்கத்தில் குழந்தைகளை குதூகலத்தில் ஆழ்த்திய
 மாஜால நிகழ்ச்சி யொன்று இன்று 08-02-2014 நடை பெற்றது . லண்டனிலிருந்து வருகை தந்த நண்பர் ஸ்ரீபதி சிவனடியான் அளித்த மாஜால வேடிக்கை தந்திர காட்சிகளை சிறியவர்களுடன் பெரியவர்களும் பார்த்து ரசித்தனர் . நிகழ்ச்சி ஆரம்பமாகுமுன் உடுவையும் சிவனடியானும்
1.
 (2) கொழும்பு தமிழ் சங்கத்தலைவர் இரகுபதி பாலஸ்ரீதரன்,கொழும்பு தமிழ் சங்க செயலாளர் தம்புசிவா ,சிவனடியான்  தில்லை

 (3) சிவனடியான் சிரிப்புக் கதைகளாலும் தந்திரக்காட்சிகள் மூலமும் சபையை தன் வசப்படுத்திய போது 

Monday, February 3, 2014

படித்த கல்லூரியையும் கடந்த காலத்தையும் மறந்து விடாத உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி பழைய மாணவர்கள்

சுமார் நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன் கல்லூரி படிப்பை முடித்துக் கொண்ட பின்னர் பட்டங்கள் பதவிகள் பல கௌரவம் சுகங்களை கண்ட பின்பும் படித்த கல்லூரியையும் கடந்த காலத்தையும் மறந்து விடாத பழைய மாணவர்கள் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி பழைய மாணவர்கள்
உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்பு கிளை கல்லூரியின்  160 ஆம் ஆண்டு நிறைவையொட்டி 19-01-2013 அன்று கொழும்பு வெள்ளவத்தை ஹோட்டலில் ஒன்றுகூடலை நடாத்தியதோடு  வானவில் சிறப்பு மலரையும் வெளியிட்டது .
உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி- உடுப்பிட்டி மகளிர் கல்லூரி பழைய அதிபர்களின் சேவை நலன்களைப் பாராட்டியும் புதிய அதிபர்களை வரவேற்றும் நினைவுசின்னங்கள் வழங்கப்பட்டன . தேசிய மட்டத்தில் சாதனைகள் நிலைநாட்டிய மாணவ-மாணவியரும் கௌரவிக்கப்பட்டனர்
சர்வதேச இணைப்பாளர் கலாநிதி வசந்தகுமாரும் மற்றும் வெளிநாடுகளில் வதியும் பழைய மாணவர்கள் சிலரும் கலந்து கொண்டனர் . அப்போது கல்லூரியின் தேவைகள் குறித்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன .
சுமார் 40-50 வருடங்களுக்கு முதல் கல்லூரிப்படிப்பை படிப்பை பூர்த்தி செய்தாலும் கல்லூரி நட்பையும் தொடர்பையும் தொடர்ந்து பேணி வரும் பழைய மாணவர் விரைந்து ஆக்க பூர்வமாக செயற்பட்டதால் பழைய மாணவர் சங்கக்கிளைகள் மூலமாகவும்  தனிப்பட்ட முறையிலும் தேவைகளின் பெரும்பகுதியை நிறைவேற்றினர் .
13-01-2014 திங்கள்கிழமை உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் ஒன்று கூடிய பழைய மாணவர்கள் வைபவரீதியாக உதவிகளைக் கையளித்தனர் ;- அன்றைய நிகழ்வின் நிழல் படங்கள் சில

1.       19-01-2013 நடை பெற்ற நிகழ்வுகளின் படத்தொகுப்பு ; நன்றி –“வீரகேசரி”
1.       13-01-2014 விழா விருந்தினர்களுக்காக காத்திருக்கும் மேடை
 1.       கனடா –நியூசிலாந்து –சுவிஸ்லாந்து –மற்றும் கொழும்பிலிருந்து வருகை தந்த பழைய மாணவர்கள் வல்லைவாளி பிள்ளையார் ஆலய அருகில் ஒன்று கூடினர்

1.       உ.அ.மி.க.ப.மா.ச. தாய்ச்சங்க செயலாளர் சி.கனகசபாபதியும் மற்றும் சிலரும் விருந்தினரை மாலை அணிவித்து வரவேற்றனர் .
விருந்தினர்கள் பிரதான வீதியிலிருந்து கல்லூரி பான்ட் வாத்தியங்களோடு அழைத்து செல்லப்பட்டனர்
  



ப.மா.ச.கொழும்புகிளையின் அனுசரணையுடன் Botswana விலுள்ள பொறியிலாளர் A.மகேந்திரன் சுமார் இரண்டரை லட்ச ரூபா செலவில் அமைத்துக் கொடுத்த துவிச்சக்கரவண்டி  தரிப்பிடம் ப.மா.ச.கொழும்புகிளைச் செயலாளர் என்.சரவணபவனால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது
 முன்னாள் அதிபர் S.S.செல்லத்துரை கட்டிடத்தை நியூசிலாந்து ப.மா.ச. கிளை சார்பில் T.விஜயகுமார் மற்றும் Dr.N.நவரஞ்சன் ஆகியோர் சுமார் இரண்டரை லட்ச ரூபா செலவில் புனரைமைத்து வர்ணம் தீட்டுவித்தனர். கட்டிடம் நியூசிலாந்திலிருந்து வருகை தந்த T.விஜயகுமாரால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது
கல்லூரி விளையாட்டு மைதான ( சன்முகவளவு ) சுற்றுசுவர் புனரைமைத்து கேற் வேலைகளுக்கு சுமார் ஒரு லட்ச ரூபாவுக்கு மேற்பட்ட தொகையை ப.மா.ச.லண்டன் கிளை கொடுத்துதவியது. ப.மா.சங்க சர்வதேச ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்  கலாநிதி T.வசந்தகுமாரால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது

ப.மா.ச.கொழும்புகிளையின் அனுசரணையுடன் நாவலப்பிட்டி நர்சிங்ஹோம் வைத்தியகலாநிதி T.யோகானந்தனால் சுமார் ஒன்றரை  லட்ச ரூபாவுக்கும் அதிகமான  செலவில் அமைக்கப்பட்ட உள்ளக ஒலிபரப்பு சாதன இணைப்புகளை அவரது உறவினர் V.சிவரூபன் கல்லூரி அதிபரிடம் வைபவரீதியாக கையளித்தார்
க. ப .மா .தாய்ச்சங்க தலைவர் ச.தில்லையம்பலம் மற்றும் கல்லூரி அதிபர் சு.கிருஷ்ணகுமார் கனடா ப.மா.ச.கிளைக்கு நன்றி பாராட்டும் சாதனத்தை திரைநீக்கம் செய்து வைத்தனர். அச்சாதனத்தில்
 “ 1989 ஆம் ஆண்டு முதல் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் செல் நெறிக்கு வலிவும் வனப்பும் வழங்கி கல்வியின் உறுதிக்கும் உயர்வுக்கும் உன்னத வளங்கள் நல்கி தாய்ச்சங்க வளர்ச்சியையும் கல்லூரி விருத்தியையும் கண்களாகக் கருதி காலவோட்டத்தில் சவால்களுக்கு முகம் கொடுக்கத்தக்கதாக வினைத்திறன் விளைதிறனுடன் நிலையான பலமிகு நம்பிக்கை நிதியமொன்றை கட்டமைத்து காத்தல் –கடமையைத் தொடரும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பயன் நிறை சேவையினை நன்றியுடன் பாராட்டி நினைவு கூரும் சாதனம் –உடுப்பிட்டி அ.மி.கல்விச்சமூகம் “ –
என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளது
கல்லூரி கருத்தரங்க மண்டபத்துக்கு கதிரைகள் திரைசீலை மேடை மேசை ஆகியவற்றுக்காக  ப .மா .ச.கொழும்பு கிளை  ஐந்து லட்ச ரூபா வரையில் செலவு செய்தது .மண்டபம்  கொழும்பு கிளை தலைவர் உடுவை.எஸ்.தில்லைநடராஜாவால்   வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது
உ/அ.மி.க ப.மா.தாய்ச்சங்க  செயலாளர்  சி.கனகசபாபதி வரவேற்புரை வழங்கினார்
ப.மா.தாய்ச்சங்க தலைவரும் முன்னாள் அதிபருமான . ச.தில்லையம்பலம் தலைமையுரை நிகழ்த்தினார்
  கல்லூரி அதிபர்.சு.கிருஷ்ணகுமார் உரையாற்றினார்
இலங்கை தொலைத்தொடர்பு நிறுவன முன்னாள் பிராந்திய முகாமையாளரும் ப.மா.சங்க  கொழும்பு செயலாளருமாகிய பொறியிலாளர்  N.சரவணபவன் உரையாற்றினார்


விழாவில் கலந்து சிறப்பிக்க சுவிட்சலாந்திலிந்து வருகை தந்த  ப.மா.சங்க  சுவிஸ் கிளை போசகர் சி .மகாலிங்கம் உரையாற்றினார்
 திறைசேரி முன்னாள் பிரதம கணக்காளரும் ப.மா.சங்க  கொழும்பு பொருளாளருமாகிய  K..கணபதிப்பிள்ளை  உரையாற்றினார்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகரரசபை முன்னாள் மன்னார் மாவட்ட முகாமையாளரும் உ/அ.மி.க ப.மா.சங்க கொழும்புக் கிளையின் உப தலைவருமான T.சிவநாதன் உரையாற்றினார்
வலயக்கல்விப்பணிப்பாளர் சி .நந்தகுமார் உரையாற்றுகையில் கல்லூரிக்கு கல்வித்திணைக்களம் வகுப்பறை அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்
 நியூசிலாந்திலிருந்து வருகை தந்த உடு அ.மி.கல்லூரி –உடு .மகளிர் கல்லூரி ப.மா.சங்க தலைவர்  T.விஜயகுமார்  உரையாற்றினார்
 கனடா computek Director of Studies மற்றும் உடு அ.மி.கல்லூரி –உடு .மகளிர் கல்லூரி ப.மா.சங்க சர்வதேச ஒன்றிய ஒருங்கிணைப்  பாளருமாகிய கலாநிதி T.வசந்தகுமார் உரையாற்றினார்

முன்னாள் கல்வி மேலதிக செயலாளர் –அரச அதிபரும் உ/அ.மி.க ப.மா.சங்க கொழும்புக் கிளையின்  தலைவருமான உடுவை எஸ்.தில்லைநடராஜா உரையாற்றினார்
 உ/அ.மி.க ப.மா.தாய்ச்சங்க  பொருளாளார் வே .பிரபாகரன் நன்றியுரை நவின்றார்
உ/அ.மி.க மாணவர்களின் கல்லூரி கீதத்துடன் நிகழ்வுகள் நிறைவுற்றது