Friday, September 7, 2007

அப்பா பற்றியும் "அப்பா" நூல் பற்றியும்

எனது அப்பா பற்றிய நினைவுகளே மல்லிகை பந்தல் வெளியீடாக “அப்பா” என்னும் பெயரில் வந்து இருக்கின்றது. இது ஏற்கனவே மல்லிகை இதழில் "படிக்காதவர் படிப்பித்த பாடங்கள்" என்னும் பெயரில் தொடராக வெளிவந்திருந்தது. இந்த நூலை இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் பார்த்து பாராட்டி கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்த நூல் 2003 ஆண்டு வெளிவந்து இருந்தது. இந்த நூல் தொடராக இவ்வலைபதிவில் வரும். அதை அப்பா என்ற வகைப்படுத்தலிலுள் சென்று பார்க்கலாம். நூலின் இறுதி அட்டையில் எனது அப்பாவை பற்றி வந்த குறிப்பு இது.

உலகப்பிரசித்தி பெற்ற கன்னியாகுமரிப் பிரதேசத்தை அடுத்துள்ள ஊர்தான் ஆரல்வாய் மொழி. அங்கு 1911 ஆம் ஆண்டில் சிவகாமிநாதபிள்ளை – பார்வதி அம்மாவுக்குப் பிறந்தவர்தான் சிங்காரநாதபிள்ளை. வாழ்க்கை வசதியற்ற காரணத்தால் படிப்பதையே கைவிட்டு விட்டுத் தனது எட்டாவது வயதில் கொழும்பு வந்தவர், இவர். பின்னர் யாழ்ப்பாணம் வந்தவரைத் தில்லைப்பிள்ளை கிளப் உள்வாங்கிக் கொண்டது. செய்யும் மீது தேவதா விசுவாசம் கொண்ட சிங்காரம்பிள்ளை கட்டம் கட்டமாகத் தன்னை மேம்படுத்திக் கொண்டதுடன் தான் தொழில் செய்துவந்த நிறுவனத்தையும் வளர்த்துக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து உடுப்பிட்டியைச் சேர்ந்த இராசம்மாவை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்டார். இந்தியா சுதந்திரமடைந்தது. அப்போது பிறந்த மகனுக்குச் சுதந்திரன் எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தார். மகளுக்கு பரதாமணி என நாமமிட்டார். உழைப்பை மாத்திரம் நேசித்து வந்த இவர் அதிகம் ஆசைப்பட்டவரல்ல. நேர்மையாகவும், நெஞ்சு நிறைந்த நட்புணர்வுடனும் கடைசி வரையும் உழைத்து வந்த இவர் 1990 இல் உயிர் நீத்தார்.

6 comments:

கானா பிரபா said...

//இந்த நூல் தொடராக இவ்வலைபதிவில் வரும்.//

ஆவலோடு இருக்கின்றேன்

த.அகிலன் said...

அது ஒரு காலப்பதிவாய் இருக்கும் என்கிற நம்பிக்கையில் காத்திருப்போர் பட்டியலில் பிரபாவுக்கு அடுத்த பெயர் என்னுடையது

உடுவை எஸ். தில்லைநடராசா said...

கானா பிரபா நாளையில் இருந்து அது வலைபதிவில் வரும்.

உடுவை எஸ். தில்லைநடராசா said...

//த.அகிலன் said...
அது ஒரு காலப்பதிவாய் இருக்கும் என்கிற நம்பிக்கையில் காத்திருப்போர் பட்டியலில் பிரபாவுக்கு அடுத்த பெயர் என்னுடையது//

நாளை மட்டும் காத்திருங்கள் அகிலன்.

மாயா said...

காத்திருக்கிறேன் ஐயா !

உடுவை எஸ். தில்லைநடராசா said...

// மாயா said...
காத்திருக்கிறேன் ஐயா !//

நாளை காலை எதிர்பாருங்கள் மாயா.