தில்லைநடராஜா என்பது எனது பெயர். கலை, இலக்கிய உலகில் உடுவை எஸ். தில்லைநடராஜா என்றும் உடுவை என்றும் அறியப்பட்ட நான் தற்போது பணியாற்றுவது இலங்கை கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராக. 1965 ஆம் ஆண்டு இலங்கை அரசினால் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பின்னர் அரசு சேவையில் நுழைந்தேன். அப்போதிலிருந்து 1978 வரை இலங்கைப் பொலிஸ் தலைமைச்செயலகத்தில் வேலை. பின்னராக இலங்கை நிர்வாக சேவை போட்டிப் பரீட்சையின் பின்னர்
1978 – 1980 வரை மட்டக்களப்பிற்கான கூட்டுறவு உதவி ஆணையாளர்
1980-1982 வரை மன்னார் கூட்டுறவு உதவி ஆணையாளர்.
1982-1988 வரை மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான கூட்டுறவு ஆணையாளர்
1988-1989 வரை வடக்குகிழக்கு மாகாணத்திற்கான மீன்பிடித் திணைக்கள பணிப்பாளர்.
1989-1990 வரை வடக்குகிழக்கு மாகாணத்திற்கான கூட்டுறவு, உணவு மற்றும் வர்த்தக அமைச்சின் பிரதிச் செயலாளர்.
1990-1991 வரை வடக்கு கிழக்கு மாகாணத்திற்கான கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளரர்
1992-1995 வரை வவுனியா அரச அதிபர்
1995-1998 வரை கிளிநொச்சி அரச அதிபர்
1998-1999 வரை இந்து கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளாராகவும் பணிபுரிந்தேன்.
2000 ஆண்டில் இருந்து இன்று வரை இலங்கை கல்வி அமைச்சியின் மேலதிக செயலாளராகவும் பணிபுரிந்த வண்ணம் உள்ளேன்.
கலை இலக்கிய துறையில் எனது ஈடுபாடு என்பது எனது மாணவப்பருவத்திலே உருவானது. அது வானொலி நாடகமாக, சிறுகதையாக, பத்திரிகை ஆசிரியனாக, நடிகனாக, நிகழ்ச்சி தொகுப்பாளனாக என்னை மாற்றியது. எனது முதலாவது சிறுகதைத் தொகுப்பான “நிர்வாணம்” 1990 இல் வெளியானது. தமிழ்நாட்டின் கோவை லில்லி தேவசிகாமணி நினைவு விருது பெற்ற இந்த நூலின் தலைப்பே இந்த வலைப்பதிவின் தலைப்பாகி இருக்கிறது. 1947 இல் யாழ்ப்பாணம் உடுப்பிட்டியில் பிறந்த நான் எனது கிராமத்தின் பெயரை உடுவை எனவாக்கி உடுவை.எஸ். தில்லைநடராஜா ஆனேன்.இதுவரையில்
நிர்வாணம் (சிறுகதைத் தொகுப்பு)
கடற்கன்னி (சிறுவர் கதை)
மந்திரக்கண்ணாடி (சிறுவர் கதை)
நம்பிக்கையோடு நிம்மதியை நாடும் யாழ்ப்பாணம் (1994 இல் யாழ்ப்பாணத்தில் எனது நேரடி அனுபவம்)
கல்யாணம் முடித்து பார் (நகைச்சுவை கதைகள்)
அப்பா (எனது அப்பா பற்றிய உணர்வு- இந்தியா ஜனாதிபதி அப்துல் கலாமின் பாராட்டு பெற்றது)
என சில நூல்களை வெளியிட்டு இருக்கின்றேன். இது தவிர நீங்கள் அறிந்திருந்த மேடை நாடகங்கள், வானொலி நாடகங்களிலும் நான் தோன்றி இருக்கின்றேன்.

14 comments:
testing
testing
testing 3
வலைப்பதிவுக்கு வருக
ரமணி வரவேற்புக்கு மிக்க நன்றி..வரப்போகும் எனது பதிவுகளை படித்த பின்னரும் இதே போன்று தாங்களின் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.
வணக்கம் , வாருங்கள்' தமிழ் வலையுலத்திற்கு உங்களின் வருகை பயனுள்ளதாய் அமைய வாழ்த்துக்கள்
வாங்கோ வலைப் பதிவு உலகத்திற்கு.
உங்களை இங்கு கண்டதில் மகிழ்ச்சி.உங்களை எனக்கு நன்றாகத் தெரியும்.தொடர்ந்து உங்கள் ஆக்கங்களை எதிர் பார்த்தபடி.
உங்களுடைய அறிமுகப்பதிவு படிக்காமலேயே மற்றப்பதிவை படித்துப் படித்து விட்டேன். உங்களைப் போன்ற நம் நாடறிந்த அறிஞர்கள் வலையுலகுக்கு வருவது என் போன்ற ஈழத்தவர்க்கு மட்டற்ற உவகை அளிக்கின்றது.
வருக வருக.
பிந்திய வரவேற்புக்கு மன்னிக்க.
வணக்கம் ,
தமிழ் வலையுலத்திற்கு உங்களின் வருகை மிகவும் பெறுமதியானது
வாழ்த்துக்கள்
வரவனையான், அற்புதன்,கானா பிரபா, கொண்டோடி, மாயா அனைவரினதும் வரவேற்புக்கு நன்றி.
அற்புதன் நீங்கள் யார் என்று அறிய ஆவலாய் உள்ளேன்.நீங்கள் கனடாவிலா இருக்கிறீர்கள் அற்புதன்?
கானாப்பிரபா எப்படியும் பிந்தியோ முந்தியோ நீங்கள் வாசிப்பியள் எண்டு எனக்கு தெரியும்.
வணக்கம் ஐயா!
உங்கள் வலைப்பதிவு வரவு மகிழ்ச்சி தருகிறது. நமது மண்சார்ந்த பலவிடயங்களை பதிவாகத் தருவீர்களென நம்புகின்றோம்.
வணக்கம்
உங்களது வலைப்பதிவை இன்று தான் பார்த்தேன்.
காலம் பிந்திய வரவேற்பு, வாருங்கள்.
நன்றி மலைநாடான் மற்றும் வி.ஜே.சந்திரன்
Post a Comment