25-01-2014 சனிக்கிழமை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன
ஆனந்தசமரக்கோன் கலைஅரங்கில் "பொன் மாலை பொழுது " இசை நிகழ்ச்சியில்
இலங்கையின் முன்னணி இசைக்குழுவான வவுனியா "ராகஸ்வரம்"
இசைக்குழுவினருடன், ஜெயந்தன் இணைந்து
வழங்கியிருந்தனர்.பார்வையாளரின் பாராட்டை பெற்ற நிகழ்ச்சியில் வினாவுக்கு சரியாக
விடையளிதோருக்கு பெறுமதியான சட்டைகள் பரிசாக வழங்கப்பட்டது
Wednesday, January 29, 2014
Monday, January 27, 2014
இனிமையான நினைவுகள் 26-01-2014 வவுனியா கச்சேரியில்
யாழ்ப்பாணத்தில் 26-01-2014 ஞாயிற்றுக்கிழமை கடமைகளை பூர்த்தி செய்து விட்டு மாலை நான்கு மணிக்கு கொழும்பு
அரச அதிபர் கமல் பத்மசிறியுடன்-மேலதிக செயலாளர் சரத் சந்திர வித்தான ஆகியோருடன்
நானும் (உடுவை தில்லையும் ) கொழும்பு திரும்பும் வழியில் வவுனியா அரச அதிபர் பந்துல
ஹரிஸ்சந்திரவின் அழைப்பில் மாலை ஆறு மணியளவில் வவுனியா கச்சேரிக்கு சென்ற போது
செல் பேசியால் எடுத்த படங்கள்
(1) GA Vavuniya,Thilla & GA Colombo
(2) GA Vavuniya கேட்டுக்கொண்டதற்கிணங்க 23 வருடங்களுக்கு உடுவை தில்லை முன் வவுனியா அரச அதிபராக கடமையாற்றியபோது எடுத்தபடத்தின் கீழே நின்றபோது ,அவர் மேலேயிருந்த படத்தையும் கீழே நின்ற என்னையும் காட்டி" மேலே நிழல்படம் ....கீழே நிஜ மனிதர் " என்றதும் எல்லோரும் சிரித்தோம்
(3) .From Left to right GA Colombo-Addl Secretary -G A Vavuniya and Thilla
(1) GA Vavuniya,Thilla & GA Colombo
(2) GA Vavuniya கேட்டுக்கொண்டதற்கிணங்க 23 வருடங்களுக்கு உடுவை தில்லை முன் வவுனியா அரச அதிபராக கடமையாற்றியபோது எடுத்தபடத்தின் கீழே நின்றபோது ,அவர் மேலேயிருந்த படத்தையும் கீழே நின்ற என்னையும் காட்டி" மேலே நிழல்படம் ....கீழே நிஜ மனிதர் " என்றதும் எல்லோரும் சிரித்தோம்
(3) .From Left to right GA Colombo-Addl Secretary -G A Vavuniya and Thilla
(4) ஞாயிறு மாலை என்றாலும் நான்
கச்சேரிக்கு வந்த செய்தி கேட்டு மகிழ்வுடன் என்னை சந்திக்க வந்த ரெபோ அனுரா
பத்மநாதன் எனது செல்பேசியில் பதிவாகிய படம்
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன ஆனந்த சமரக் கோன் கலையரங்கில் பொன் மழைப் பொழுது 25-01-2014
நமது மண் தந்த இளம் இசைக்கலைஞர் கந்தப்பு ஜெயந்தன் குழுவின் இசை நிகழ்வு பார்த்து மகிழ்ந்தேன் .
எமது அழைப்பை ஏற்று வருகை தந்த கலைஞர்கள் ,பெரியோர்கள் கலைஞர்
உடுவை தில்லை நடராஜா ஐயா அவர்களும் வருகை தந்தார் — with Thillanadarajah
Singarampillai.
PRIOR CONFERENCE IN CONNECTION WITH 50th ANNIVERSARY CELEBRATION OF SRI LANKA ADMINISTRATIVE SERVICE -
PRIOR CONFERENCE IN CONNECTION WITH 50th ANNIVERSARY
CELEBRATION OF SRI LANKA ADMINISTRATIVE SERVICE -
50th ANNIVERSARY CELEBRATION at National Level organized by
Sri Lanka Administrative Association ( SASA)will be held on 17th February,2014.
Provincial Level Symposiums are being conducted in connection
with the above Celebration; Accordingly Northern Provincial Symposium was held at the Jaffna Distict
Secretariat on Sunday 26 th January,2014. The members of SASA of Nothern
Province including Chief Secretary North, GAA Jaffna,Kilinochchi, mullativu,
Vavuniya and Mannar participated. Govt. Agent Colombo and Addl
Secretay,(President of SASA) Ministry of Water Supply & Drainage( National
Coordinator of SASA) also participated.Mr.S.Thillanadarajah a Senior member of
SASA participated as Chief Guest and delivered the Keynote Address.
Chief Guest lights the Traditional Oil lamp.GAA Jaffna, Colmbo,Vavuniya and Mannar also seen in the Picture
(From L to R)- Mr.Suntharam Arumainayagam GA Jaffna, Mr.Sarath Chandra Vithana, Addl.Secretary-Ministry of Water Supply & Drainage, Mrs Vijeluxumi Chief Secretary North,Mr.Kamal Padmasiri G.A.Colombo and Mr.Thillanadarajah ( Former GA Vavuniya & Kilinochchi)
(From L to Right) Mr.Vethanayagam GA Mullaitivu, Mr.M.K.Banula Harischandra G A Vavuniya and GA Mannar and other Senior Officers have participated
in the Symposium Tuesday, January 21, 2014
Monday, January 20, 2014
திருமணத்தில் கலந்துகொண்ட சகோதர இனத்தவனாக உடுவை.எஸ்.தில்லைநடராஜா
சுமார் 35 வருடங்களுக்கு முன் இளைஞர்கள்
யுவதிகள்
இலங்கை நிர்வாக சேவையில் (S L A S ) 144 பேர் இணைந்து
கொண்டோம்
.அனேகமாக எல்லோரும் சிகரத்தை தொட்டு
அமைச்சு செயலாளர்களாக –அரச அதிபர்களாக இன்னும்
சிலர்
வெளிநாடுகளில் தூதுவர் –உயர்
ஸ்தானிகர் என பதவிகள்
வகித்து இப்போது ((J.P.ஆக)
JOLLY PENSIONER ஆகி தோழர்
தோழியர் நன்மை தீமைகளில் சந்திப்போம்
.04-01-2014 அன்று கண்டி SUISSE Hotel
இல் என்னுடன்
சேவையில் இணைந்து கொண்ட ஒருவரின் மகளான
DAMINTHA –PRATHAP திருமணத்தில்
கலந்துகொண்ட ஒரேஒரு
சகோதர இனத்தவனாக
உடுவை.எஸ்.தில்லைநடராஜா
3 rd Meeting of the Chiefs of Public / Civil Service Commissions of SAARC Countries ...10th 11 th & 12th January,2014
3 rd Meeting of the
Chiefs of Public / Civil Service Commissions of SAARC Countries ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் பங்களாதேஷ்
பூட்டான் நேபாளம்இந்தியா மாலைதீவு இலங்கை ஆகிய நாடுகளின் பொது மற்றும் சிவில் சேவை
ஆணைகுழு பிரதிநிதிகள் பாராளுமன்றத்தை பார்வையிட்ட பின் முன்புற வாசலில் எடுத்த
புகைப்படம்

SAARC கலந்துரையாடலில் என் .எச் .பத்திரன (பிரதம
மந்திரியின் முன்னாள் சிரேஸ்ட உதவி செயலாளர் -உடுவை.எஸ் .தில்லைநடராஜா (முன்னாள்
கல்வி மேலதிக செயலாளர் )ஆனந்த செனிவிரத்ன(முன்னாள் பொலிஸ்மா அதிபர் )
Monday, January 6, 2014
தவறிப் பிறந்த தரளம் ( குறும்பட குறிப்பு ) www.youtube.com. (Forgotten Pearl) Short Film
தவறிப் பிறந்த தரளம் ( குறும்பட குறிப்பு )
http://www.youtube.com/watch?v=nLJt9L2LWNE
http://www.youtube.com/watch?v=nLJt9L2LWNE
‘தவறிப் பிறந்த தரளம்’ என்ற தலைப்பில் வருணன் வருணன் என்பவரால் யாழ்ப்பாணம் முல்லைத்தீவு
பகுதிகளில் படமாக்கப்பட்ட சுமார் பத்து நிமிட கால எல்லையை கொண்ட குறும்படம் வெளிவந்துள்ளது.
ஹெலிகாப்டர்
பறக்கும் சத்தம் கேட்டு பள்ளிக்கு போகும் சிறுவன் பயந்து திரும்பி ஓடி வரும் நிகழ்வொன்றின் தாக்கத்தை படம் சித்தரிப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
குடும்பம் என்பது
ஆயிரம்காலத்து பயிர். பெற்றோர் விளையாட்டுத் தனமாக விபரீத ஆசைகளை வளர்த்துக் கொள்ள அவர்களைவிட பிள்ளைகள் தான் பாதிக்கப் படுவார்கள் என்பதை யதார்த்தமாக
சித்தரிக்கும் இப்படத்தில் ஆடம்பரமான காட்சிகள் அநாவசிய உரையாடல்கள் எதுவுமில்லை. காலையில்
ஆரம்பமாகும் கதை சிறிது நேரத்திலேயே முடிவில்லாத முடிவுடன் முடிகின்றபோதும்-
திருமணத்தின் பின் கணவன் –மனைவி உறவும், ஒழுக்கமும் உயர்ந்த அளவுக்கு பேணப்பட
வேண்டியதின் அவசியத்தை சொல்லாமல் சொல்கிறது.
குடிகாரத்தந்தை
தூக்கத்தில் இருக்க தாய் சிரமப்பட்டு மகனை பாடசாலைக்கு அனுப்ப, சிறுவன்
ஹெலிகாப்டர் பறக்கும் சத்தம் கேட்டு பயந்து பள்ளிக்கு செல்லாது வீட்டுக்குத் திரும்பி
வருகின்றான். பெற்றோர் சமாதானம் செய்து அவனை மீண்டும் பள்ளிக்கு அனுப்புகின்றனர்.
வழியில் வம்பளக்கும் சிலர் அந்த சிறுவனின் தாயாரின் நடத்தை சரியில்லை என ஏளனம்
செய்ய -அது சிறுவன் மனதில் முள்ளாக தைத்து வீடு திருப்பியவனுக்கு, தாயைக் காண வில்லை
என்பது அதிர்ச்சி.
‘அம்மா எங்கே?’
அன்று கேட்கும் சிறுவனிடம் இன்னொரு பெண்ணை
அழைத்து வந்து ,’இண்டு முதல் இவள் தன் உன்ரை அம்மா’ என்று சொல்லி அவளையும் என்று அறிமுகப்படுத்த-
அவன் தகப்பனையும் புதிய தாயையும் வெறுத்து வீட்டை விட்டு வெளியேறுகின்றான்— வழியில்
முச்சக்கரவண்டி யொன்றிலிருந்து இறங்கி மகனை அழைக்கும் தாயும் ஒரு புதிய துணை
தேடியதைக் கண்டு
சிறுவன் விரக்தியோடு கால் போனபோக்கில் போகிறான். அப்போது ஹெலிகாப்டர் பறக்கிற
சத்தம் கேட்கிறது.சிறிது நேரத்துக்கு முன்பு எந்த ஹெலிகாப்டர் ஓசை பயங்கரமாகத் துரத்தியதோ...
அந்த ஓசை அவனுக்கு பயங்கரத்தை தரவில்லை.
ஒன்றாக இருந்த
தாயும் தந்தையும், புதிதாக தேடிய துணைகளால் இரண்டு குடும்பமாக சிறுவன் ஏக்கம்
ஏமாற்றம் ஆகியவற்றோடு தனி வழி செல்கின்றான் . இப்படியே போனால் சமூகம் ஒழுக்கம்
விழுமியம் எல்லாம் என்னாவது என்ற அச்சமும் எழுகிறது., பெற்றோர் சுற்றம் சமூகம் என
வளர வேண்டியவன் எல்லாவற்றையும் இழக்கும்போது சமூக விரோதியாகவும் மாறலாம் என்ற
எச்சரிக்கைச் சைகையையும் எதிரொலிக்கும் குறும்படமாக வும் இதனை பார்க்கலாம்
அடுப்பில் விறகு எரியும் காட்சியோடு ஆரம்பமாகும் படத்தில்
ஔவை யாரின் ஆத்திசூடி வசனங்களை மனனம் செய்து, தாய் சொல் கேட்டு பாடசாலைக்
கொப்பியில் எழுதும் சிறுவன்- அதே அறையில் சாரத்தால் போர்த்துப் படுத்து உறங்கும்
தந்தை என - வீட்டு நிலைமையை காட்டுவதும் – சிறுவன் காலணி அணியும்போதும்- பள்ளிகூட
சீருடை புத்தகப்பையுடன் புறப்படும்போதும் காமராவின் அண்மைப் பார்வை நன்றாகவே
உள்ளது
பனைஓலை மட்டையால்
அடைக்கப்பட்ட வேலி – வேலியிலிருக்கும் பொட்டால் வெளியே வரும் நாய் ஆகியவற்றை இயக்குனர்
அவதானிக்க வைத்துள்ளார்.
சின்ன சின்ன உரையாடல்கள் ஆங்கில உப தலைப்புகளுடன்
அமைக் கப்பட்டிருப்பதால் மொழி தெரியாதவர்களும் படத்தையும் உரையாடல் களையும் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும்.
வருணன் வருணன் ,சமந்த தசநாயக்க ,சஞ்சீவ
அபயக்கோன் என தமிழ் சிங்கள கலைஞர்கள் சேர்ந்து உருவாக்கிய குறும்படம் குழந்தைகளை பெற்றோர்
அரவணைத்து வளர்க்கவேண்டியதை வலியுறுத்து கின்றது --
உடுவை .எஸ்
.தில்லைநடராஜா
Subscribe to:
Posts (Atom)