Saturday, May 26, 2012

மாணவர்கள் நாடக வேடத்தை களைந்ததும் தமது படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்


கொழும்பில் பல்வேறு சமூகப்பின்னணி கொண்ட மாணவர்களின் அர்ப்பணிப்பையும் ஆற்றலையும் வெளிப்படுத்தும் நாடக விழாவாக றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்ற விழா நாடக விழா அமைந்துள்ளதைக் காணக்கூடியதாக இருந்தது.

றோயல் கல்லூரி என்ற வட்டத்துக்கு வெளியே வந்து கொழும்பு மாவட்டம் மட்டுமல்லாமல்யாழ்ப்பாணம் உள்ளடங்கலாக வடபகுதிகிழக்குஎன நாடாளாவிய ரீதி யில் கல்லூரிகள்பலவற்றை இணைத்து நாடகவிழாவை நடத்தியதன்மூலம் நாடக நிகழ்வுகள் ஊடாக பலரை ஒன்றிணைக்கும் பண்பாட்டையும் உருவாக்கி-சமகால நிகழ்வுகளையும் சமூகம் செல்ல வேண்டிய வழியையும் மேடைப்படைப்புகள் ஊடாக வெளிப்படுத்தியதைக் காணமுடிந்தது.

அரங்கினுள் நடைபெறும் கலைநிகழ்வுகள் பார்வையாளர்களை சிறிது நேரத்துக்காவது வேறு ஒரு உலகத்துக்கு அழைத்துச் செல்லும் அனுபவத்தை ஏற்படுத்த வேண்டும்.

விமான நிலையத்தினுள் நடந்து சென்று ஒரு இருக்கையில் அமரும் போது அது விமானத்தின் உள்ளே உள்ள இருக்கை என்பதை உணர்கின்றோம்பின்னர் விமானம் பறக்கிறது-”ஆனந்தம் ! ஆச்சாியம் !! அனுபவம் ” எல்லாம் கிடைக்கிறதுமுடிவில் இன்னொரு விமான நிலையத்தில் இறங்கியதும்புதிய அனுபவத்துடன் இருக்கையிலிருந்து எழுந்து வெளியே நடந்து செல்கிறோம்கலைநிகழ்வுகளும் அது போன்ற களிப்பையும் புதுவிதமான அனுபவத்தையும் ஏற்படுத்துவதுடன் ஒரு செய்தியையாவதுஒரு படிப்பினையையாவது சொல்ல வேண்டும்மகாத்மா காந்தி அாிச்சந்திரா நாடகம் பார்த்து உண்மை பேச ஆரம்பித்து உயர்வடைந்தது நாமறிந்ததுஅது போல நாடகங்களும் மனதில் நிலைக்க வேண்டும்


பார்த்தவர்கள்பாராதவர்களுக்கு சொல்லி அதனை அனுபவிக்க வைக்க வேண்டும்மாணவர்களது நாடகம் தொழில் முறைக்கலைஞர்களது போல இருப்பினும் வேடத்தைக் களைந்தவுடன் நாடகத்தை மறந்து மேடையை மறந்து படிப்பில் நாட்டம் கொள்ள வேண்டும்.

விமானப்பயணம் என்று சொன்னேன் அல்லவா ?
ஒரு தடவை லண்டனில் பின்னேரம் நான்கு மணி-இலங்கை நேரம் இரவு ஒன்பது மணிக்கு லண்டனிலிருந்து விமானமூலம் புறப்பட்டேன்பத்து மணிநேரப்பயணம்இலங்கை வந்த போது மறுநாள் காலை ஏழு மணிஅந்தப்பயணம் ஒரு சுகமான அனுபவம்ஏறி அமர்ந்த சில நிமிடங்களில் அழகான இளவயதுப்பெண் மெல்லிய புன்னகையுடன் என் இடுப்பைத்தொட்டும் தொடாமலும் சீற்பெல்றைப் பொருத்தினாள்சீற்றுக்கு முன்னாலுள்ள தொலைக்காட்சியில் தமிழ்ப்படம் பார்க்க எல்லாம் செற் பண்ணித்தந்தாள்அடிக்கடி எனக்குப்பக்கத்தில் வந்து ”என்ஜோய்” சொல்லி குளிர்ப்பானம்சாப்பாடு தந்தாள்அடிக்கடி என் பக்கத்தில் வருவாள்., புன்னகையுடன் என்ன வேணும் என்று கேட்பாள்குளிர் என்றதும் ”என்ஜோய்” என்று சொல்லி போர்வையால் போர்த்து விட்டாள்கொஞ்சம் சுடச்சுடக் கோப்பி எண்டதும் ”என்ஜோய்” சொல்லிக்கொண்டு கோப்பி தந்தாள்.
காலை ஏழு மணிக்கு கட்டுநாயக்காவிலை இறங்கிற போது எனக்கு ஒரு மாதிரிஅவள் சிரித்துக்கொண்டே பயணம் சந்தோஷமாக இருந்ததா ? இனி மேலும் வாருங்கோபாய் எண்டு சொல்லி கை காட்டினாள்...

பிரயாணக்களைப்புஓய்வின் பின் பின்னேரம் வெள்ளவத்தை சுப்பர் மார்க்கட்டுக்கு சாமான் வாங்கப் போனால்அங்கே விமானத்தில் எனக்கு உதவி செய்த அந்த வடிவான பெம்பிளைப்பிள்ளை நின்றாள்நான் நாலைந்து தரம் திரும்பித் திரும்பி பார்த்து சிரிக்கிறன்அவள் சிரிக்கவே இல்லைஎன்னாலை பொறுக்க முடியயில்லைநான் கேட்டன்-” என்ன ராத்திரி லண்டனிலையிருந்து கட்டுநாயக்கா வரையும் சிரித்துக் கதைத்துக் கொண்டு வந்தியள்இப்ப ஒண்டும் தெரியாத மாதிரி நிக்கிறியள் ?” அவள் சொன்னாள்-” அது அப்படியுட்டிகடமைமயில் வேஷம் போட்டால் ஆட வேணும்., நாய் வேஷம் போட்டால் குரைக்க வேணும்இப்ப நான் ஓவ்டியுட்டியிலை இல்லைமயிலாக ஆட வேண்டியதில்லைநாயாகக் குரைக்க வேண்டியதில்லை.”

இங்கேயும் குறியீட்டு நாடகத்திலை மாணவர்கள் நாய் வேஷம் குரங்கு வேஷம் போட்டு அந்தப்பாத்திரமாகவே மாறி நடித்தீர்கள்நாடக விழா முடிந்து விட்டதுவேடத்தைக்களைந்து நாய் போலக்குரைக்காமல் குரங்கு போலத்தாவிப் பாயாமல் படிக்க வேண்டும்கவனமாகப்படிக்க வேண்டும்.ஒண்டும் தெரியாமல் இருக்கலாம்., ஆனால் உலகத்தில் வாழத்தெரிய வேண்டும்நீங்கள் வாழ வேண்டும்., மற்றவர்களையும் வாழ வைக்க வேண்டும்அதற்காக படிக்க வேண்டும்.

நாடகத்தில் ஒவ்வொருவரும் என்ன கேட்பார்கள் ? அதற்கு என்ன வசனம் பேச வேண்டும் என்று பாடமாக்கியிருப்பீர்கள்ஒத்திகை பார்த்திருப்பீர்கள்.
அதை விடக்கூடிய கவனம் எடுத்து சோதனைக்கு என்ன கேள்வி வரும்எப்படி பதில் எழுத வேண்டும் என்று ஆயத்தம் செய்தால் தான் பரீட்சையில் சித்தியடை யலாம்.

வேலை வாய்ப்புகளுக்கான நேர்முகப்பரீட்சையில் என்ன கேள்வி கேட்பார்கள் ? எப்படி பதில் அளித்தால் வேலை கிடைக்கும் என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

சிறிதளவு தெரிந்து வைத்துக்கொண்டு பெரிதாக சாதிப்போம் என்ற எண்ணம் எங்களை விழுத்தி விடும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
பல வருடங்களுக்கு முன்பு இதே றோயல் கல்லூரி மண்டபத்தில் பார்வையாளா்கள் மத்தியில் வானொலிக்கலைஞர்கள் பல நாடகங்களை நடித்து ஒலிப்பதிவு செய்து கொண்டிருந்தனர்வானொலி நாடகம் என்பதால் நடிகர்கள் வசனங்களைப்பாடமாக்காமல் நாடகப்பிரதிகளைப்பார்த்து வாசிப்பார்கள்குரல் வளத்தாலும் ஒலிக்குறிப்புகளாலும் நாடகமாக்கி விடுவார்கள்வானொலி நடிகர் ஒருவர் கடைசி நேரத்தில் வராததால் திடீரென ஒரு மேடைநடிகரிடம் நாடகப்பிரதியைக் கொடுத்து வாசிக்கச்சொன்னார்கள்.

அவர் பிரதியை வாங்கி ஒலிவாங்கிக்கு முன் சென்று-
உரத்த குரலில் உறி...உறி...உறி.....உறி...” என்றார்ஒருவருக்கும் ஒன்றும் வியங்க வில்லை.
வானொலி நாடகப்பிரதியை எழுதியவர் மேடைக்கு வந்து விடயத்தை விபரமாகச் சொன்னார்.

அந்த நாட்களில் கொம்பியுட்டர் இல்லைதமிழ் தட்டெழுத்து யந்திரத்தில் வட மொழி எழுத்தான ”ஹி” எழுத்தை தமிழ் தட்டெழுத்து செய்வதானால் ”” எழுத்தையும் பக்கத்தில் ”றி” எழுத்தையும் தட்டெழுத்து செய்வார்கள்.
நாடக ஆரம்பத்தில் வில்லன் பாத்திரம் பெரும் சத்தத்தோடு -” ஹி...ஹி...” எனச் சிரிக்க வேண்டும்அந்தப்பாத்திரம் ஏற்றவருக்கு இது தெரியாததால் -
உரத்த குரலில் -உறி...உறி...உறி....” என்று பிரதிஎழுதியவர் விளக்கமளிக்க , சபையோர் - ” உரத்த குரலில் உறி...உறி....உறி.....உறி....”என்று பெரிதாகக் கத்தியதோடு அந்தப் பாத்திரம் ஏற்ற நடிகர் எங்கு சென்றாலும் ”உறி...உறி...உறி...உறி....” எனக் கேலி செய்தார்கள்.

நாடக மூலம் பல விடயங்களைச் சொல்லிக் கொடுக்கலாம்ஒரே கையிலுள்ள ஐந்து விரல்களையும் நன்கு பயன் படுத்தி பத்து வரையும் எண்ணலாம்.

இது போல இன்னொரு விடயம்நான்காவது விரலை மோதிரவிரல் என்று குறிப்பிட்டுதிருமணத்தின் போது நான்காவது விரலிலுள்ள மோதிரங்களை கணவனும் மனைவியும் மாற்றிக்கொள்வார்கள்அதற்கு அர்த்தம் என்னவென்றால் பெருவிரல்கள் பெற்றோரையும்ஆட்காட்டி விரல்கள் சகோதரர்களையும் , நடு விரல்கள் உங்களையும்மோதிர விரல்கள் உங்களது வாழ்க்கைத்துணையையும்சிறிய விரல்கள் உங்கள் பிள்ளைகளையும் குறிப்பிடும்இப்போது உள்ளங்கைகளை ஒன்றின்மீது ஒன்று வைத்துநடு விரல்களை மாத்திரம் உள்ளங்கையுடன் முட்டத்தக்கதாக மடித்து கைகளை கூப்பிய நிலையில் வைத்துக்கொள்ளுங்கள்.

பெற்றோரைக் குறிப்பிடும் பெருவிரல்களை எளிதாகப்பிரிக்கலாம்., சகோதரர்களைக் குறிப்பிடும் ஆட்காட்டி விரல்களையும் எளிதாகப்பிரிக்கலாம்., பிள்ளைகளைக் குறிப்பிடும். பெற்றோரோ சகோதரர்களோ அல்லது பிள்ளைகளோ பிரிந்து செல்லலாம்நடு விரல்களான கணவன் மனைவி ஒன்றாகும் போதுதுணையான நான்காவதாக உள்ள மோதிரவிரல்கள் பிரிக்கமுடியாமல் இருப்பதைக் காணலாம்திருமணபந்தத்தின் போது நான்காவது விரலில் மாற்றிக்கொள்ளும் மோதிரஉறவு பிரிக்க முடியாததாக-பிரியாததாக இருக்கவேண்டுமென்பதே அர்த்தம்.

நாடகத்தின்போதுரசித்து பாராட்டி அடிக்கடி கை தட்டுவதைக்கவனித்தேன்கொரிய நாட்டில் இப்படிக் கை தட்டும் போது வகைவகையாகக் கை தட்டுவார்கள்அங்கே கை தட்டுவதும் ஒரு உடற்பயிற்சியாகக் கருதப்படுகிறதுமேடையில் கலைஞர்களைப் பாராட்டிக் கைதட்டும்போதே நீங்களும் வகைவகையாகக் கை தட்டி சோர்வைப்போக்கி உடற்பயிற்சி செய்து கொள்ளலாம்.

வழமையாக கை தட்டுவது போலத்தட்டினால் உடலுக்கு நல்லதுவிரல்கள் முட்டாமல் உள்ளங்கைகளை மட்டும் தட்டினால் வயிற்றுக்கு நல்லதுவிரல் நுனிகளை மட்டும் தட்டும்போது ஓசை குறைவாக இருந்தாலும் அப்படித்தட்டுவது கண்ணுக்கு நல்லதுவிரல்களை ஒன்றுடன் ஒன்று முட்டும்வகையில் தட்டுவது இருதயத்துக்கும் தொண்டைக்கும் நல்லதுகைகளை தலைக்கு மேல் உயர்த்தி சற்று பின்பக்கமாக அசைத்து தட்டினால் முதுகெலும்பு பலமடையும்புறங்கை மேல் மறுபுறங்கையால் தட்டினால் தோள்மூட்டு வலுவடையும்கைகளை முஷ்டி பிடித்து தட்டினால் உடலில் உள்ளத்தில் புதுச்சக்தி பிறக்கும்.

மற்றவர்களைப் பாராட்டும் அதே வேளை தங்களைப் பலப்படுத்தும் கைதட்டல் பயிற்சியை கொரிய நாட்டு நிகழ்வுகளில் காணலாம்.
தொகுப்பு - எஸ்.எம்.எஸ்நன்றி-வீரகேசரி -வாரமலர்-ஒக்டோபர் பதினைந்து


No comments: