“எப்படித் துடைத்தாலும் முகம் பார்க்கும் கண்ணாடி தெளிவாயில்லை. எண்ணை மாதிரியிருக்கு” என்ற போது அப்பா பற்பொடியால் முகம் பார்க்கும் கண்ணாடியைத் துடைக்க சொன்னார். இப்படியே அரிக்கன் லாம்புச் சிம்னியை வீபூதியைப் பயன்படுத்தி துடைக்கச் சொன்னார்.
ஒரு நாள் எனது சீப்பு அழுக்காக இருந்ததால் துப்பரவாக்குவதற்காக சீப்புப் பற்களிடையே தும்பை விட்டு படாதபாடு பட்டேன். அப்பா அதை வாங்கி பாவித்த பல் துலக்கும் பழைய தூரிகையால் சவர்க்கார நீரையும் சேர்த்து நொடிப்பொழுதில் துப்பரவாக்கி விட்டார்.

(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)
2 comments:
இதெல்லாம் அப்ப வாழ்க்கையோடு சேர்ந்துவந்த பாடங்கள்.
இப்ப...?
கையில் ரிமோட்டுடன் இருக்குதுங்க பிள்ளைகள்.
நீங்கள் சொல்வது சரிதான் துளசி கோபால். கால மாற்றத்தில் நல்லவை பல விடுபட்டு போகின்றது.
பின்னூட்டத்திற்கு நன்றி
Post a Comment