Saturday, December 15, 2007

உலகின் முதல் பெண் பிரதமரின் செருப்பில் இருந்து ஒரு பாடம்.


1960 களின் ஆரம்பத்தில் நாட்டின் தலைவியின் படத்தையும் அவர் காலில் அணிந்து கொள்ளும் சாதாரண இறப்பர் செருப்புகளின் படத்தையும் பல தினசரி பத்திரிகைகள் பிரசுரித்து தலைவி மிக எளிமையானவர். இரண்டு ரூபா எழுபத்தைந்து சதம் பெறுமதியான செருப்பைத்தான் விரும்பி அணிகின்றார் என்ற குறிப்பையும் வெளியிட்டது. செருப்பு வாங்க அப்பா தந்த பத்து ரூபா பணத்தில் ஏழு ரூபாவுக்கு மேல் மிகுதி கொடுத்த போது அவருக்கு கோபம் வந்தது.

“குளியலைறைக்கும் படுக்கையறைக்கும் இடையே போடக்கூடிய செருப்புத்தான் இறப்பர் செருப்பு. விலை குறைவானதாயிருக்கலாம். காலுக்கு சொகுசானயிருக்கலாம். ஆனால் வெய்யிலுக்கோ அல்லது வெளியிடங்களுக்கோ அணிவதற்கேற்ற செருப்பல்ல. ஏனென்றால் சூட்டை உள்ளிழுத்து பின்னர் சூட்டைக் கடத்தும் தன்மை கொண்டதால் அதை வெய்யிலுக்கு அணியக் கூடாது என்றார். அதே செருப்புடன் பள்ளிக்கூடம் சென்ற போது அப்பா சொல்லியதையே ஆசிரியரும் சொன்னார். பகல் பொழுது பள்ளியிலிருந்து வீட்டுக்குச் சென்று திரும்பி வந்த போது கண்கள் சிவந்திருந்தையும் தொண்டை கரகரத்ததையும் உணர்ந்த போதுதான் அப்பாவை நினைத்துக் கொண்டேன். அவர் ஆலோசனைப்படியே ஏழு ரூபா பெறுமதியான தோல் செருப்பு நீண்ட காலம் பயன்பட்டது.


(இதன் முன்னைய இடுகைகள் 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள்...)

No comments: