உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி மாணவனான என் வயது 15. மாணவர்களுக்காக ‘மாணவன்’ என்ற சஞ்சிகையை அச்சிட்டு வெளியிடும் நோக்கத்தோடு சிறிது சிறிதாக சேமித்த சுமார் 300 ரூபா பணத்தோடு யாழ் நாவலர் அச்சகத்தில் வேலைகளை ஆரம்பித்தேன். அப்பாவுக்கு தெரியாமல் அச்சிட விரும்பியது. யாழ் நகர பஸ் தரிப்பிடத்துக்கு வராமல் ஆனைப்பந்தி சந்தியில் இறங்கி நாவலர் அச்சகம் போய் வரக் கூடிய வசதி – குறைந்த அச்சுக்கட்டணம் - இதனால் நாவலர் அச்சகத்தை தெரிவு செய்தேன். 1962 ஆம் ஆண்டு 115 ரூபா கொடுத்து 1000 மாணவன் பிரதிகளை அச்சிட்டேன். பிரதியொன்றின் விலை 15 சதம். வீட்டில் மூடி வைத்த இரகசியம் பாடசாலை மட்டத்தில் பரகசியமாகி – சஞ்சிகைக்கு ஆசிரியனான கதை தங்கையால் வீட்டுக்கு தெரிய வர அப்பாவும் பணம் கொடுத்து மாணவன் வாங்கிப் படித்து விட்டு என்னிடம் பல கேள்விகள்.
“அப்பாவின் பெயரைச் சொல்லி ஒரு விளம்பரம் எடுக்க முடிந்ததால் ஒரு பிரதி அச்சிட 10 சதம் செலவு. 12 சதப்படி கடைகளுக்கு விற்கலாம். முதலாவது இதழ் விற்பனைக்காக கடைகளுக்குக் கொடுத்துள்ளேன். இராண்டாவது இதழ் அச்சு வேலைகள் நடக்கிறது. முதலாம் இதழ் விற்பனைக் காசில் மூன்றாம் இதழ் அச்சடிக்கலாம். இரண்டாம் இதழ் விற்பனைக் காசில் நாலாம் இதழ்...” என் கதையை நிறுத்தியது அப்பாவின் அர்த்தம் நிறைந்த சிரிப்பு.
“எந்த விஷயத்தையும் ஆரம்பிக்க ஒரு தெளிவான நோக்கம் இருக்க வேணும். என்ன இலக்குகள் என்பது தீர்மானிக்கப்பட வேணும்.- காசும் மற்ற விஷயங்களும் போதியளவு இருக்குதா? எல்லாம் செய்யிறது சாத்தியப்படுமா? பலன்களும் இலாபமும் வருமா? எல்லாம் கவனிக்காவி;ட்டால் அரைகுறையிலை அம்போ” என்றார்.
இரண்டாவது ‘மாணவன்’ இதழே இறுதி இதழானது. முன்னூறு ரூபா புத்தக வெளியீட்டில் மூழ்கியது. புதிதாக ஏதாவது செய்ய முனையும் போது – அப்பா சொல்லிய அரைகுறையிலை அம்போ அடிக்கடி மனதில் தோன்றி பலவாறும் சிந்திக்க வைக்கும்.
அதனால் நல்ல தீர்வுகளைப் பெறாத சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதில்லை.
நிர்வாக சேவை அதிகாரியாக வந்த பின் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் கலந்து கொண்ட பயிற்சி நெறிகளில் ஆங்கிலத்தில் படித்ததை அப்பாவின் அம்போ புத்திமதியுடன் ஒப்பிட வேண்டி ஏற்பட்டது.
PURPOSE – TARGET – GOALS – FEASIBILITY REPORT – BENEFIT – RETURN
அப்பா மட்டுமல்ல – முகாமைத்துவ – நிர்வாக நுட்பம் தெரிந்த பலர் சாதாரணமாக வாழ்வதால் நாங்கள் அவர்களைக் கணக்கில் எடுப்பதில்லை.

(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)
No comments:
Post a Comment