எனக்கு 41 வயது பூர்த்தியாகி 42 வயது ஆரம்பமான வேளை. வேலை முடிந்து மாலை வேளை வீடு சென்றதும் தலையிடி ஆரம்பமாகிவிடும். மாத்திரைகளில் ஆரம்பித்து தைலம் பூசுவது வரை எல்லாம் செய்து பார்த்து விட்டேன். காலையில் எல்லாம் சரியாக இருக்கும். மூன்று நான்கு நாட்கள் என்னை அவதானித்த அப்பாவை வருத்தத்துடன் பார்த்தேன்.
‘’பின்னேரம் ஆனவுடன் பயங்கரமாகத் தலை வலிக்கிறது. பெரிய எழுத்துக்களைக் கூட வாசிக்க முடியாது. ஒரே எரிச்சலாக வருகிறது.’’
அப்பா வலு சிம்பியாகச் சொன்னார்:- "நல்ல கண் டாக்டரிடம் கண்ணைக் காட்டிச் சோதிக்க வேணடும்’’ என்றார்.
கண் டாக்டரின் சோதனையைத் தொடர்ந்து மூக்குக் கண்ணாடி முகத்தில் ஏறியது.
அதற்குப் பின் இரவு பதினொரு மணி வரை மிகச் சிறிய எழுத்துக்களையும் வாசிக்கலாம். ஏனென்றால் தலைவலி வருவதில்லை. எல்லாத் தலைவலிக்கும் மாத்திரையும் தைலமும் மருந்தாகி விடாது. அத்துடன் அப்பா நிறுத்தி விடவில்லை. இரண்டு மூன்று வருடத்துக்கு ஒரு தடவை தலைவலி கண்வலி வந்தால் மாத்திரைகளை நம்பாமல் டாக்டரைச் சந்திக்க வேண்டுமென்றார்.

No comments:
Post a Comment