எங்கள் கிராமத்தில் எடுத்ததற்கெல்லாம் சாத்திரம் பார்ப்பார்கள். பல்லி விழுந்தால், பல்லி சொன்னால் பஞ்சாங்கத்தைப் புரட்டுவார்கள். காகம் கரைந்தால் அதற்கும் ஏதாவது சொல்வார்கள். ஓணான் குறுக்கே போனால் கூடாது என்று எப்போதும் ஏதாவது சொல்லிக்கொண்டேயிருப்பார்கள். அப்பா சகுனம் சாத்திரம் எல்லாவற்றிலும் நம்பிக்கை வைப்பதில்லை. தெய்வ நம்பிக்கை இருந்தால் வேறு நம்பிக்கை தேவையில்லையென்பார் அணில் குறுக்காகச் சென்று நல்ல காரியம் ஒன்றும் ஆகவில்லை. அதனால் ஓணான் குறுக்காகப் போனாலும் கேட்டகாரியம் எதுவும் நடக்காது என்று சொல்வார்.
எழுது வினைஞனாகக் கடமையாற்றி நிர்வாக சேவைக்குப் பதவி உயர்வு பெற்றதும் அக்காலத்தில் காங்கேசன்துறையிலிருந்து புறப்படும் இரவு புகையிரதத்தில் ஏறி கொழும்பு வருவதாக ஏற்பாடு. மறந்து போகக் கூடாது என்பதற்காக சாப்பாட்டை கட்டியெடுத்து வாசலருகே வைத்தனர். இரவு நேரமாகையால் அரிக்கன் லாம்பையும் கொழுத்தி என்னை ஏற்றிச் செல்லதற்கான வாகனம் வந்தது. தான் தாமதம் பூனை குறுக்கே குதித்தோட அரிக்கன் லாம்பு பூனையின் கால்களுக்குள் இடறுப்பட்டு நிலத்தில் சரிய சிம்னி உடைந்து சிதறியது விளக்கு உடைந்ததை ‘’ ஐயோ! முழுவியளம் சரியில்லை ‘’ என்று யாரோ கொன்னார்கள்.
அப்பாவின் சிரிப்பு ‘’ சாப்பாட்டை ருசியாகச் சமைத்தால் பூனை வரும். சாப்பாட்டுக்கிட்ட விளக்கை வைச்சிருந்தா பூனை விளக்கைத் தட்டிப்போட்டு சாப்பாட்டை எடுக்கும். இதையெல்லாம் பார்த்த ஒண்ணும் செய்ய முடியாது. தம்பி புறப்படும்’’
முதல் முதல் ஒரு பெரிய பதவியை ஏற்பதற்காக புறப்படும் போத பூனை குறுக்கே வந்தது என்று தயங்கினாலும் அப்பா தந்த தைரியம் உற்சாகத்தையம் ஊக்கத்தையும் தந்தது. பதவிக்கு சந்த 25 வருடங்கள் பூர்த்தி. எந்த விக்கினமும் இதுவரை இல்லை.

(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)
1 comment:
தமிழகத்தில் எதாவது காரியத்துக்கு செல்லும் போது பாப்பான் ஒரு ஆளாக எதிரில் வந்தால், திரும்பிவிடுவார்கள். காரணம் 'ஒத்த பாப்பானைப் பார்த்தால் மொத்த காரியமும் கெட்டுடும்' என்று சகுணம் சொல்லுவார்கள்
Post a Comment